Religious School


சிவமயம்
திருச்சிற்றம்பலம்.
பன்னிருதிருமுறைகள்

சைவசமயத்தின் முழுமுதற்கடவுளானசிவபெருமானின் பெருமைகளைமுறைப்படுத்தி கூறுவதேதிருமுறைகனாகும்.
இறைவனேஅருளாளர்களின் உள்ளத்தில் எழுந்தருளியிருந்துபாடுவித்தும் தாமேஅடியெடுத்துக் கொடுத்தும் எழுதியும் உள்ளதினால் இத்திருமுறைகள் பலஅற்புதங்களையும் நிகழ்த்தியுள்ளன.

தஞ்சைப்பெரியகோவிலைக் கட்டியமாமன்னன் இராசஇராசசோழன் பொல்லாப்பிள்ளையாரிடம் அருள் பெற்றநம்பியாண்டார் நம்பியின் மூலம் இத்திருமுறைகளைத் தொகுப்பித்துசைவஉலகிற்குதந்தபெருந்தகையாவான்.

மொத்தமாக 27 அருளாளர்கள் அருளிச்செய்ததெய்வீகப் பாடல்களை 11 திருமுறைகளாகநம்பியாண்டார் நம்பிதொகுத்தார்கள். முதல் மூன்றுதிருமுறைகளும் திருஞானசம்பந்தரின் பாடல்களும் 4ம் 5ம் 6ம் திருமுறைகள் திருநாவுக்கரசர் பாடல்களும் 7ம் திருமுறைசுந்தரமூர்த்திகளின் பாடல்களும் 8ம் திருமுறையாகமாணிக்கவாசகரின் பாடல்களும் தொகுக்கப்பட்டன. இந்தநால்வரையும் சைவசமயக் குரவர்கள் என்றும் அழைக்கின்றோம். முதல்7 திருமுறைகளும் தேவாரங்களாகவும் 8ம் திருமுறைதிருவாசகம் என்றும் ஆலயங்களில் பாடப்படுகின்றன. 9ம் திருமுறையாக 9 பதுஅடியவர்கள் பாடியபாடல்கள் திருவிசைப்பாஎன்றும் சேந்தனார் பாடியபாடல்கள் திருப்பல்லாண்டுஎன்றும் வழங்கப்பெறும். திருமூலர் பாடியதிருமந்திரங்கள் 10ம் திருமுறையாகவும் திருவாலவாயான் ஆகவந்தசிவபெருமான் உட்பட12 அருளாளர்கள் அருளிய 40 பிரபந்தங்கள் 11ம் திருமுறையாகவும் வகுக்கப்பட்டன.

அடியவர்களின் பெருமைகளைஉலகிற்குஉணர்த்துவதற்காகசுந்தரரைதிருக்கையிலையிலிருந்துபூலோகம் அனுப்பி இறைவனேஅடியெடுத்துக் கொடுத்துஅடியவர்களின் பெருமைகளைப் பாடுவித்தார். இவர்களின் வரலாறுகளையும் பெருமைகளையும் தான் அறியவேண்டும் எனவிரும்பியஅநபாயச்சோழச் சக்கரவர்த்திதமதுமதிமந்திரியாக இருந்தசேக்கிழாரைக் கேட்கஅவரும் இறைவன் ‘உலகெலாம்’எனஅடியெடுத்துக்கொடுக்க 63 திருத்தொண்டர்களின் வரலாற்றைஎமதுசைவஉலகிற்குபெரியபுராணம் எனப்பெயரிட்டுதந்துதெய்வச்சேக்கிழார் எனப்போற்றப்பட்டார். இப் பெரியபுராணம் 12ம் திருமுறையாகபதியப்பட்டள்ளது.

இந்தப் பன்னிருதிருமுறைகளும் தமிழர் வாழ்வியல் பண்பாடுநாகரீகம் சமயம் வரலாறுமுதலியனவற்றைத் தௌ;ளத்தெளிவாகக் காட்டும் அற்புத நூல்களாகத் திகழ்கின்றன. அள்ளஅள்ளக் குறையாதசைவநுண்பொருட்கள் பலவற்றையும் உள்ளடக்கிநிற்கும் இத்திருமுறைகளைஓதிஉணர்ந்துசிவன் அருள் பெற்றுஉய்வதுசைவத் தமிழர் ஆகியஎமதுகடனாகும்.