Temple History

About Us
Ealing Shri Kanaga Thurkkai Amman Temple Trust

Ealing Shri Kanaga Thurkkai Amman Temple is a Hindu Temple and also a registered charity (Charity No: 1014409) in Ealing, London, England. The temple is also known as Ealing Amman Temple.

Vision

Provide and establish a place of worship. Advance the HINDU Religion according to the special traditions prevailing in SRILANKA AND TAMIL NADU.

History
  • The temple was founded on the 10th August 1991 at Harrow Honey Bond Hall.
  • The place of worship was moved to Southall Shakelton Hall on 25.10.1991 and later moved to Wembley Union Hall on 11.08.1992.
  • The first Executive Committee was formed on 14.04.1993.
  • The current temple premises was purchased on 09.06.1995.
  • The first ‘Maha Kumbabishekam’ (“Consecration Ceremony” – மகாகும்பாபிஷேகம் – குடமுழுக்கு விழா ) was held on the 6th of June 1999.
  • The first ‘Mahotsavam’ was held from 20.07.2001 for 25 days.
  • The second ‘Maha Kumbabishekam’ (“Consecration Ceremony” – மகாகும்பாபிஷேகம் – குடமுழுக்கு விழா ) was held on the 6th of June 2011.
ஸ்ரீ கனக துர்க்கை அம்மன் ஆலயம்
ஸ்ரீ கனக துர்க்கை அம்மன் ஆலய தோற்றமும் வளர்ச்சியும்

10-08-1991 Harrow Honey Bond மண்டபத்தில் 9 உறுப்பினர்கள் கொண்ட அறங்காவலர் சபையுடன் சென்னை காளிகாம்பாள் ஆலயபிரதம குருக்கள் சிவஸ்ரீ டாக்டர் சாம்பமூர்த்தி சிவாச்சாரியார் திருவுருவப்படங்களுடன் திருவிளக்குப்பூசையை நடாத்தி ஸ்ரீ கனகதுர்க்கை அம்மன் என்னும் திருநாமத்துடன் வழிபாட்டை ஆரம்பித்து வைத்தார்கள்.

  • 25-10-1991 வழிபாட்டிடம் Southall Shakelton மண்டபத்திற்கு மாற்றப்பட்டது.
  • 11-08-1992 வழிபாட்டிடம் Wembley Union மண்டபத்திற்கு மாற்றப்பட்டது.
  • 29-01-1993 எழுந்தருளி அம்மன் பிரதிஷ்டை நடைபெற்றது.
  • 14-04-1993 சித்திரை தமிழ்ப் புத்தாண்டில் அறங்காவலர் சபையின் சிபாரிசில் முதலாவது ஆலய நிர்வாக சபை பதவியேற்று ஆலய வளர்ச்சிக்கான பணிகளில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டது.
  • 09-06-1995 ஆலயத்திற்கான நிரந்தரமான கட்டிடம் கொள்வனவு செய்யப்பட்டது.
  • 13-09-1996 ஆலளத்தில் நவக்கிரக பிரதிஷ்டை நடைபெற்றது.
  • 07-09-1997 விநாயகர் வள்ளி தேவசேனா சமேத முருகப்பெருமானின் எழுந்தருளி விக்ரகங்கள் பிரதிஷ்டை நடைபெற்றன.

1998 ம் வருடம் வைகாசி விசாகத்தில் மூலவர் மற்றும் ஏனைய பரிவார மூர்த்திகளுக்கான அத்திவாரங்கள் இடப்பெற்று கட்டிட வேலைகள் ஆரம்பமாயின.

  • 29-05-1999 ஆலய மகாகும்பாபிஷேகத்திற்கான கணபதிஹோம வழிபாடு நடைபெற்றது.
  • 05-06-1999 அடியவர்களின் பக்திபூர்வமான எண்ணெய்க்காப்பு வழிபாடு நடைபெற்றது.
  • 06-06-1999 முதலாவது மகாகும்பாபிஷேகம் (குடமுழுக்கு விழா ) வெகு சிறப்புடன் நிறைவுபெற்றது. தொடர்ந்து 45 நாட்கள் மண்டலாபிஷேகம் நடைபெற்றது.
  • 21-07-2000 அலங்கார உற்சவம் நடைபெற்றது.
  • 10-02-2001 சிவன் பார்வதி எழுந்தருளி விக்ரகம் பிரதிஷ்டை நடைபெற்றது.
  • 20-07-2001 முதலாவது மகோற்சவப் பெருவிழா ஆரம்பமாகி அம்பிகை 25 நாட்கள் வௌ;வேறு திருக்கோலங்களுடன் அடியவர்களுக்கு அருட்காட்சி கொடுத்து அருள்பாலித்தார்கள்.
  • 12-08-2001 அம்பிகை சித்திரத் தேரில் வெளிவீதி வலம் வந்து அடியார்களுக்கு அருட்காட்சி அளித்து அருள்பாலித்தார்கள்
  • 30-11-2008 வைரவர் எழுந்தருளி விக்ரகம் பிரதிஷ்டை நடைபெற்றது.
  • 06-06-2011 இரண்டாவது மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
  • 09-07-2012 லக்ஷ்மி நாராயணர் விக்ரகம் பிரதிஷ்டை நடைபெற்றது.
ஆலய வழிபாடுபூசைகள்

மாதாந்த விசேட தினங்களான சதுர்த்தி சங்கடஹர சதுர்த்தி பூரணை கார்த்திகை ஏகாதசி திருவிளக்குப்பூசை நவராத்திரி கௌரி விரதம் ஸ்கந்தசஷ்டி விநாயகர் பெருங்கதை ஐயப்ப மண்டல பூசை திருவெம்பாவை தைப்பொங்கல்திருநாள் சித்திரை தமிழ் புதுவருடப்பிறப்பு யாவும் சிறப்பாக நடைபெறுவதுடன் அடியவர்களின் ஏனைய வேண்டுதல்களும் வருடாந்த மகோற்சவமும் நடைபெறுகின்றன.

ஆலய செயற்பாடுகள்

ஆலயத்தின் வளர்ச்சிக்கும் அதன் பணிகளுக்குமாக இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை ஆலய நிர்வாக சபை அங்கத்தவர்கள் பொதுச்சபையினால் நியமிக்கப்பட்டு ஆலய அறங்காவலர்களுடன் இணைந்துசெயல் திட்டங்களை வகுத்து செயலாற்றுவார்கள்.

Temple Opening Time – All Days

Monday to Sunday opens at 7am to 10pm. Tuesday and Friday closes at 10:30pm.
Closed for 30 minutes from 3:30pm to 4pm.
Special days like Puratasi Sani 9th and 16th October temple opens at 6:30am.

Contact Us

5 Chapel Road Ealing London W13 9AE UK
Email : info@ammanealing.org
Phone : 0208 810 0835

© 2021 ammanealing.org All rights reserved
Developed by Adhanam Infotech Private Limited
www.adhanam.com